நலிவடைந்த தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்

நலிவடைந்த தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-05-21 19:56 GMT

திருச்சி மண்டல இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சந்திரசேகரன், துணைத்தலைவர் முருகானந்தம், அமைப்புக்குழு தலைவர் அடைக்கலம் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். பொதுக்குழுவில், 'நலிவடைந்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் அரசு ஏதாவது ஒரு உதவித்தொகை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பயிற்சி தொழிற்கூடத்தை அரசே அமைத்து கொடுக்க வேண்டும். மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் மோட்டார் வாகன சட்டத்தை இயற்ற வேண்டும். 16 வயது முடிந்தவர்களை தொழில் கூடத்தில் பணியமர்த்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்' என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்