மாணவர்கள் முககவசம் அணிவதை கண்காணிக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் மீண்டு்ம் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் மாணவர்கள் முககவசம் அணிவதை கண்காணிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-06-24 18:45 GMT

காரைக்குடி, 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்து கல்லூரிக்கு வரும் வரை முககவசம் அணியாமல் வருகின்றனர். ஒரு சில மாணவர்கள் மற்றும் மாணவிகள் மட்டுமே பஸ்சில் இருந்து இறங்கி கல்லூரி முடித்து விட்டு மீண்டும் வீடு திரும்பும் வரை முககவசம் அணிந்து வருகின்றனர். மற்ற மாணவ-மாணவிகள் முககசவம் அணிவதை முறையாக கடைபிடிக்காமல் இருந்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து வர வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்