அரசு பஸ் திடீர் பழுது
கல்லிடைக்குறிச்சி அருகே அரசு பஸ் திடீரென பழுதாகி நின்றது.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி பகுதியில் இருந்து அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மணிமுத்தாறுக்கு காலை மற்றும் மாலையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பஸ் நேற்று காலையில் ஜமீன் சிங்கம்பட்டிக்கு வந்தபோது திடீரென பழுதாகி நின்றது. ரோட்டின் திருப்பத்தில் பஸ் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை அறிந்ததும் பொதுமக்கள் டிராக்டர் கொண்டு வந்து அரசு பஸ்சை கட்டி இழுத்து ரோட்டின் ஓரமாக கொண்டு சென்று நிறுத்தினர். பின்னர் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் அங்கு வந்து சரிபார்த்து பஸ்சை ஓட்டிச்சென்றனர். பஸ் திடீரென பழுதாகி நின்றதால் அதில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் அவதிப்பட்டனர்.