கருவாட்டு கடைக்காரர் தற்கொலை
கருவாட்டு கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி, மே.30-
சங்ககிரி அருகே தேவண்ண கவுண்டனூர் கிராமம் கிடையூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28). இவர், சங்ககிரி வி.என்.பாளையம் பகுதியில் கருவாட்டு கடை நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்தார். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் சிவகுமாரின் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். இதில் மனம் உடைந்து காணப்பட்ட சிவகுமார், தனது கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமார் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.