உரிகம் வனப்பகுதியில்தொட்டிகளில் தண்ணீர் குடித்த யானைகள்

Update: 2023-04-30 19:00 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை, ஓசூர், அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்கு வருவதை தடுக்க வனத்துறையினர் ஆங்காங்கே தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இந்த தண்ணீர் தொட்டிகளில் யானைகள் காலை, மாலை நேரங்களில் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன.

இந்த நிலையில் உரிகம் வனப்பகுதியான உடுபராணி என்ற இடத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் யானைகள் காலை, மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. இதனை அப்பகுதி வழியாக செல்வோர் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்