பில்லர் ராக் சுற்றுலா தளத்தில் தத்ரூபமான யானைகள் உருவம் - ஆர்வத்துடன் பார்த்துச் செல்லும் சுற்றுலா பயணிகள்
பில்லர் ராக் பகுதியில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் யானைகளின் உருவச்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி,
'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இன்று வார இறுதி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக பில்லர் ராக் சுற்றுலா தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள யானைகளின் உருவத்தைப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். பில்லர் ராக் பகுதியில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 யானைகளும், 2 குட்டி யானகளும் நிற்பது போன்ற உருவச்சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், அதன் முன்பு நின்றவாறு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.