மக்னா யானை சுட்டுக்கொலை
ஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானை சுட்டுக்கொலை செய்தவர்கள் குறித்து வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவரை சம்பவ இடத்திற்கு அழைத்து வனத்துறையினர் யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது யானையை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும், இந்த யானை 42 வயது மதிக்கத்தக்க மக்னா யானை என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் யானையை சுட்டுக்கொண்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.