யானைக்கால் நோய் கண்டறியும் முகாம்

பெருந்தோட்டம் ஊராட்சியில் யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடந்தது.

Update: 2022-11-11 18:45 GMT

திருவெண்காடு:-

மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உத்தரவின் பேரிலும், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிழக்கு பகுதியில் யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ஜெய்சங்கர், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் இளங்கோவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், ஜவஹர்குமார், அபிமன்யூ, ஆய்வக நுட்புணர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்