யானைக்கால் நோய்கண்டறியும் முகாம்
நகரந்தல் கிராமத்தில் யானைக்கால் நோய்கண்டறியும் முகாம் நடந்தது.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நகரந்தல் கிராமத்தில், யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடந்தது.
செய்யார் சுகாதார துணை இயக்குனர் சதீஷ்குமார் உத்தரவின் பேரில், பூச்சியியல் வல்லுனர் துரைராஜ் ஆலோசனைப்படி சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர் புஷ்பநாதன், செவிலியர் ஜெயந்தி, ஆய்வக நூட்பனர்கள் நிரஞ்சனா, சபீனா, ஜெயபாரதி, வெங்கடேசன் ஆகியோர் 300 பேருக்கு ரத்த மாதிரி சேகரித்தனர்.
சுகாதார ஆய்வாளர்கள் வையாபுரி, ரகுபதி, முகமது கவுஸ், பிரேம்குமார், கமலக்கண்ணன் ஆகியோர் வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.