ஆசனூரில் யானைகள் தினவிழா:விழிப்புணர்வு ஊர்வலம்

ஆசனூரில் யானைகள் தினவிழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

Update: 2023-08-12 23:28 GMT

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனச்சரகம் சார்பில் உலக யானைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆசனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து வனத்துறையினர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து ஊர்வலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் சுதாகர், வனச்சரகர் பாண்டிராஜன் மற்றும் வனத்துறையினர் விழாவில் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்