பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் யானைகள் செஸ் அணிவகுப்பு விழா நடந்தது.

Update: 2022-08-09 16:09 GMT

பொள்ளாச்சி

உலக பழங்குடியினர் தினம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவையொட்டி யானைகள் செஸ் அணிவகுப்பு விழா பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் நேற்று நடைபெற்றது. இதனை ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தொடங்கி வைத்தார். சீத்தல் ஓய்வு விடுதியில் இருந்து டாப்சிலிப் வரவேற்பு மையம் வரை யானைகள் செஸ் பலகையை சுற்றி வந்தது. 12 யானைகளின் மீது செஸ் போர்டு போன்று தயாரிக்கப்பட்ட பாதாகையை போர்த்தப்பட்டு இருந்தது.

இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதில் உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர்கள் காசிலிங்கம், புகழேந்தி, வெங்கடேஷ், வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், பாகன்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்