யானைகள் கணக்கெடுக்கும் பணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-05-17 19:58 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

கணக்கெடுக்கும் பணி

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள், புலி, சிறுத்தை, மான், காட்டு எருமைகள், சிங்கவால் குரங்கு, சாம்பல் நிற அணில்கள் என எண்ணற்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதனால் இப்பகுதி மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகவும், பள்ளத்தாக்குகளையும் கொண்டும் காணப்படுகிறது.

இங்கு ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு நேற்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

3 நாட்கள் நடக்கிறது

இந்த பணி நாளை வரை நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பணியை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் தொடங்கி வைத்தார். வன ஆர்வலர்கள், வனச்சரக அதிகாரிகள், வனவர்கள், வன தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து கணக்கெடுக்கும் பணியினை செய்து வருகின்றனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த கணக்கெடுப்பின்போது யானைகள் நடமாட்டம் குறித்தும் கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட யானைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது என அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்