சாலையில் சுற்றித்திரிந்த யானை

தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றித்திரிந்த யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

Update: 2023-02-28 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் சுற்றித்திரிந்த யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

யானைகள் முகாம்

தேன்கனிக்கோட்டை வனச்சரகம் பேவநத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை, சூரப்பன்குட்டை என்ற பகுதியில் 10 யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து வந்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.

அப்போது யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

வாகன ஓட்டிகள் அச்சம்

இந்த நிலையில் நேற்று தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று மரக்கட்டா பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்தது. இந்த யானை சாலையிலேயே நின்று கொண்டு இருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் அவர்கள் சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து யானையைநொகனூர் காட்டிற்குள் விரட்டினர். இதையடுத்து வாகனஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்