தமிழக-கர்நாடக எல்லையில் கூட்டமாக உலா வரும் யானைகள்

தமிழக-கர்நாடக எல்லையில் கூட்டமாக யானைகள் உலா வருகின்றன.

Update: 2023-02-26 20:54 GMT

தாளவாடி

தமிழக-கர்நாடக எல்லையில் கூட்டமாக யானைகள் உலா வருகின்றன.

யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருள்வாடி கிராமம் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ளது.

அகழி அமைக்க கோரிக்கை

இந்தநிலையில் நேற்று மதியம் கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றித்திரிந்தன. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்தனர். பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகள் ஊருக்குள் புகாதவாறு 4 மணி நேரமாக போராடி மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.

கடந்த சில நாட்களாக யானைகள் அருள்வாடி கிராமம் அருகே முகாமிட்டு சுற்றி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே யானைகள் காட்டை விட்டு வெளியேறாதபடி வனத்துறையினர் அகழிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்