தாளவாடி அருகே வயது முதிர்வால் இறந்த யானை; மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி

தாளவாடி அருகே வயது முதிர்வால் இறந்த யானை; மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி

Update: 2022-07-07 21:37 GMT

தாளவாடி

தாளவாடி அருகே ஜீர்கள்ளி வனச்சரத்துக்கு உள்பட்ட பாளையம் கிராமத்தின் அருகே கடந்த 2 நாட்களாக உடல் நலம் பாதித்த நிலையில் பெண் யானை ஒன்று படுத்துகிடந்தது. இதுபற்றி அறிந்ததும் மருத்துவ குழுவினர் அங்கு சென்று யானைக்கு உணவு அளிக்க முயன்றனர். ஆனால் யானை உணவு ஏதும் உட்கொள்ளவில்லை. படுத்தே கிடந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை யானை இறந்தது.

இதையடுத்து கால்நடை துறை டாக்டர் சதாசிவம் யானையை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் அவர் கூறும்போது, 'இறந்த யானைக்கு 55 முதல் 60 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக யானை எழுந்திருக்க முடியாமல் படுத்து கிடந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யானை இறந்தது' என்றார்.

இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு சென்று யானைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து யானையின் உடல் மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்