தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் உள்ள குழப்பங்களை களைய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் உள்ள குழப்பங்களை களைய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் பொ.ஜீவா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் செ.அருள்ராஜ், ஞா.தமிழ்செல்வி, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் பி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மா.சிவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் உள்ள குழப்பங்களை களைய வேண்டும். அரசு விதிகளுக்கு முரணாக வழங்கப்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் அ.மாரி கணேஷ் உள்பட திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தின் பிரதான நுழைவு வாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆசிரியர்கள் பிரதான நுழைவு வாயிலுக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.