விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகலெக்டர் பழனி ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணியை மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-07-04 18:45 GMT

வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தினால் விழுப்புரம் மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 4,431-ம் (பேலட் யூனிட்), கட்டுப்பாட்டு கருவிகள் 2,855-ம் (கண்ட்ரோல் யூனிட்), யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் கருவி 3,193-ம் (விவிபேட்) ஆக மொத்தம் 10,479 மின்னணு வாக்கு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் பெல் நிறுவனம் மூலம் விழுப்புரம் மாவட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பொறியாளர்களை கொண்டு முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கியது.

கலெக்டர் ஆய்வு

இதற்காக மாவட்ட கலெக்டர் பழனி மேற்பார்வையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெல் நிறுவன ஊழியர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியானது வருகிற 10.8.2023 வரை நடைபெறவுள்ளது. இப்பணியை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தாசில்தார் வேல்முருகன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் கோவர்தனன், கலெக்டரின் நேர்முக உதவியளார் (தேர்தல்) சரஸ்வதி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தயா.இளந்திரையன், அ.தி.மு.க. வக்கீல் தமிழரசன், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்