சோழத்தரம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காவாலக்குடியை சேர்ந்தவர் ராஜா(வயது 54). மின்வாரிய ஊழியரான இவர், சம்பவத்தன்று விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.