மின்வயர் திருட்டு
தேனி அருகே வாழையாறு குடிநீர் மின்னேற்று நிலையத்தில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மின்வயர் திருடு போனது.
தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சிக்கு வாழையாற்றில் குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக வாழையாறு குடிநீர் மின்னேற்று நிலையத்துக்கு தற்காலிக பணியாளர் கருப்பசாமி பணிக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த மோட்டாரில் இணைக்கப்பட்டு இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மின்வயர் திருடு போயிருந்தது. அதுகுறித்து அவர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தகவல் தெரிவித்தார். அதுதொடர்பாக செயல்அலுவலர் ராவணா விஜயலட்சுமி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.