மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக அகவிலைப் படியை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரிய தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. நடராஜன் முன்னிலை வகித்தார். பொறியாளர் சங்கம் ஜாகோ ஜீவா, ஐக்கிய சங்கம் திவ்யநாதன், பொறியாளர் கழகம் ஆலன்பின் அண்ணா தொழிற்சங்கம் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.