சேலத்தில் மின்சார சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்

சேலத்தில் மின்சார சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-12-17 19:56 GMT

சேலம், 

சேலம் மின் பகிர்மான வட்ட நகரக்கோட்டத்தின் சார்பில் மின்சார சிக்கன வாரவிழா கொண்டாப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலத்தில் நேற்று மின்சார சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வள்ளுவர் சிலை முதல் அப்சரா இறக்கம் வரை சென்ற இந்த ஊர்வலத்தை சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் செயற் பொறியாளர் சுந்தரி மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்