மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாளையங்கோட்டை தியாகராஜநகர் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மின்சாரத்துறை பொது துறையாக நீடிக்க வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். 3 சதவீதம் பஞ்சப்படி உயர்வை 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவப்படியை ரூ.300 என்பதை ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில துணைத்தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சண்முகசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மூத்த தலைவர் ராஜாமணி, மாநிலத் துணை தலைவர் நேசகுமாரி மல்லிகா, துணைத் தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் சீனி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.