கரும்பு பாரம் ஏற்றிய டிராக்டரில் மின்சாரம் பாய்ந்தது; டிரைவர் பலி

திருப்புவனம் அருகே கரும்பு பாரம் ஏற்றிய டிராக்டரில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார்.

Update: 2022-06-20 17:15 GMT

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அகரத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது வயலிலிருந்து கரும்பு வெட்டப்பட்டு படமாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. இதற்காக நேற்று பிற்பகலில் கரும்பு வெட்டப்பட்டு டிராக்டரில் ஏற்றப்பட்டது. டிராக்டரை திருப்பாச்சேத்தி பக்கமுள்ள ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிசெல்வம் (வயது 30) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கரும்பு சரிந்து விழாமல் இருக்க இரும்பு ரோப் மூலம் டிராக்டரில் கட்டப்பட்டது.

அதன் பின்னர் டிராக்டர் அங்கிருந்து சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டது. டிராக்டர் கொந்தகை ரோட்டில் உள்ள தனியார் சேம்பர் அருகே வந்த போது அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி கரும்பு கட்டப்பட்டுள்ள இரும்பு ரோப்பில் உரசியுள்ளது. இதனால் டிராக்டரில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் ஆண்டிசெல்வம் தூக்கி வீசப்பட்டு உள்ளார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள கொந்தகை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ெகாண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த போது ஆண்டிசெல்வம் இறந்தது தெரிய வந்தது. அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்