மின் ஊழியர்கள் தர்ணா

மின் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-30 12:00 GMT

வந்தவாசி

மின் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி பயணியர் விடுதி அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் மின் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வேறொரு பகுதி மின் ஊழியர் ஒருவர், தனக்கு உரிய மரியாதை தரவில்லை எனக் கூறி மேற்பார்வையாளர் காண்டீபன், கம்பியாளர் பாபு, உதவியாளர் ராம்பிரகாஷ் ஆகிய 3 பேரையும் அவதூறான வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.

இது குறித்து உதவி பொறியாளர் பஞ்சமூர்த்தி, வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் புதன்கிழமை காலை வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்த மின் ஊழியர்கள் பணியை புறக்கணித்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் ஊழியர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் உதவி செயற்பொறியாளர் பத்மநாபன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததையடுத்து மின் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


Tags:    

மேலும் செய்திகள்