'தினத்தந்தி' செய்தி எதிரொலி: தொழிலாளி வீட்டின் ரூ.95 ஆயிரம் மின் கட்டணம் சரி செய்யப்பட்டது- மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: தொழிலாளி வீட்டின் ரூ.95 ஆயிரம் மின் கட்டணம் சரி செய்யப்பட்டது- மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2022-09-08 20:34 GMT

தாளவாடி

தாளவாடியை அடுத்த மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்தவர் ரேவண்ணா (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காளி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் சிமெண்டு அட்டை போட்ட வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய செல்போனுக்கு ரூ.94 ஆயிரத்து 985 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மல்குத்திபுரம் தொட்டியில் உள்ள ரேவண்ணா வீட்டுக்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது ரீடிங் எடுக்கும்போது குளறுபடி ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை சரி செய்த அதிகாரிகள், கூடுதலாக வந்த மின் கட்டணத்தை செலுத்த வேண்டாம் என கூறினர். மின் கட்டணம் சரி செய்யப்பட்டதால் ரேவண்ணா குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்