கோவில்பட்டியில்மின்வாரிய விழிப்புணர்வு பிரசாரம்
கோவில்பட்டியில்மின்வாரிய விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
கோவில்பட்டி:
மின்வாரியம் சார்பில் பருவமழை காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் இணையதள வழியில் மின் கட்டணம் செலுத்தும் முறைக்கான ஒலி, ஒளிகாட்சி விழிப்புணர்வு வாகன பிரசார தொடக்க
விழா கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கோட்ட செயற்பொறியாளர் சகர்பான் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு பிரசார வாகனத்தை நகரசபை தலைவர் கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர்கள் குருசாமி, மிகாவேல், லட்சுமிபிரியா, முனியசாமி, ஆறுமுகம் மற்றும் இளநிலை பொறியாளர்கள் கண்ணன், மகேந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நகரில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.