இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூர்
கிருஷ்ணகிரி, ஓசூர் மின் வாரிய செயற்பொறியாளர்கள் முத்துசாமி, கிருபானந்தன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்தனப்பள்ளி, ஜூனூர், ஜிஞ்சுப்பள்ளி, சின்னகொத்தூர், ஆவல்நத்தம், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், நேரலகிரி, தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், வேப்பனப்பள்ளி, மாதேப்பள்ளி, நரணிகுப்பம், முஸ்லீம்பூர், தடத்தாரை, சாதனப்பள்ளி, நெடுஞ்சாலை, சென்னசந்திரம், அரசு மருத்துவக்கல்லூரி, இ.ஜி.புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோன்று உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்க்கம், பீர்ஜேபள்ளி, நாகமங்கலம், நல்லராலபள்ளி, உள்ளுகுறுக்கை, போடிச்சிபள்ளி, வரகானபள்ளி, கடூர், சின்னட்டி, கெலமங்கலம், காடுதானபள்ளி, டி.கொத்தப்பள்ளி, இருதாளம், அனுசோனை, பொம்மதாதனூர், ஜே.காருப்பள்ளி, முகலூர், ஜக்கேரி, அக்கொண்டபள்ளி, பைரமங்கலம், பச்சப்பனட்டி, பஞ்சாட்சிபுரம், பேவநத்தம் அலசட்டி, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குந்துகோட்டை, பாரந்தூர், அந்தேவனபள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, தண்டரை, கண்டகானபள்ளி, பாலதோட்டனபள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதானபள்ளி, திம்மசந்திரம், அரசகுப்பம், ராயக்கோட்டை நகரம், ஒண்ணம்பட்டி, காடு மஞ்சூர், புதுப்பட்டி, ஈச்சம்பட்டி, லிங்கம்பட்டி, கொப்பகரை, முத்தம்பட்டி, தேவனம்பட்டி, கிட்டம்பட்டி, தின்னூர், வேப்பாலம்பட்டி, லட்சுமிபுரம், எஸ்.என்.அள்ளி, கருக்கனஅள்ளி, எடுவனஅள்ளி, அளேசீபம், எச்சம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.