இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
தர்மபுரி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக கொட்டாயூர், மாங்கரை, மஞ்சநாயக்கன அள்ளி, நெக்குந்தி, ஆட்டுக்காரம்பட்டி, சோகத்தூர், ஈச்சம்பட்டி, புறவடை, பாலஜங்கமனஅள்ளி, முத்தம்பட்டி, சாமிசெட்டிப்பட்டி, கமல் நத்தம், ஓமல்நத்தம், நாகர்கூடல் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோன்று இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகர், ஒட்டப்பட்டி, உங்கரானஅள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.