கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-11-03 20:16 GMT

கொண்டலாம்பட்டி,

சேலம் 5 ரோடு அருகே உள்ள சொர்ணபுரி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 33), எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் ராசிபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு மனைவி ேஹமாவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். ராசிபுரத்தில் தனது மனைவியை விட்டுவிட்டு பின்னர் சேலத்தில் படித்து வரும் தனது 7 வயது மகளை அழைத்துக்கொண்டு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சொர்ணபுரியில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிர்பாராதவிதமாக டயர் சாலையில் சறுக்கி வண்டி கீழே சாய்ந்ததில் தவறிவிழுந்து அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சந்தோஷ் குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்தவிபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்