கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை மகன் ஏழுமலை (வயது 32). எலக்ட்ரீசியனான இவர் நேற்று முன்தினம் ரோடு மாமந்தூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மின் ஒயரில் ஏழுமலையின் கை பட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.