மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.

Update: 2023-06-19 18:38 GMT

கரூர் பசுபதிபாளையம் தெற்கு தெரு ஏ.வி.பி. நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ஆறுமுகம் (வயது 19). எலக்ட்ரீசியனான இவர், நேற்று முன்தினம் பசுபதிபாளையம் தெற்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி, ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்