மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Update: 2023-02-21 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகன் அப்பணனசாமி (வயது 32). எலக்ட்ரீசியன். இவர் விழாக்களுக்கு ஒளி, ஒலி அமைக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாவிலோடையில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்கு மின்விளக்கு கட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அப்பன சாமி மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த காடல்குடி போலீசார் சம்பவ பகுதிக்கு ெசன்று, அப்பனசாமியின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்