மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
திருப்புவனம்
திருப்புவனம் அருகே உள்ள வாவியாரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி (வயது 52). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முதியோர் இல்லத்தில் உள்ள 2-வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தார். இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் விசாரணை நடத்தி வருகிறார்.