தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை

தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-05 19:46 GMT

சாத்தூர், 

சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் சண்முகக்கனி (வயது 27). எலக்ட்ரீசியன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காயத்ரி (23) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவரை இவரது மனைவி மற்றும் அம்மா சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரது மனைவி காயத்ரி தனது 2 மகள்களை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சண்முக்கனி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபட்டி போலீசார் சண்முகக்கனியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காயத்ரி அளித்த புகாரின் பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்