மரக்கிளை முறிந்து விழுந்து மின்வாரிய ஊழியர்கள் படுகாயம்

பாபநாசம் அருகே மரக்கிளை முறிந்து விழுந்து மின்வாரிய ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-06 20:56 GMT

பாபநாசம்;

பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை சுண்ணாம்பு காலவாய் பகுதியில், பழமை வாய்ந்த தூங்கு மூஞ்சி மரம் உள்ளது. பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பழுதடைந்த மின் கம்பிகளை சரி செய்வதற்காக, இந்த மரத்தின் அருகே அமைந்துள்ள மின்சார கம்பத்தில் மின் ஊழியர்கள் தங்களது பணிகளை மேற்கொண்டிருந்தனர்.அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பழமை வாய்ந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.இதில் மின்சீரமைப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் நீலமேகம், மாரியப்பன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் அருகில் இருந்த விஜயா என்பவரின் குடிசை வீடும் சேதம் அடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்