கலெக்டர் அலுவலகம் முன் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-04 18:15 GMT

ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பிருந்து மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் காங்கேயன் தலைமை தாங்கினார். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி 1998-ம் ஆண்டு முதல் தற்போது வரை பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திட வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்திட வேண்டும்.

கே- 2 அக்ரிமெண்ட் நடைமுறையை ரத்து செய்து சிட் அக்ரிமெண்ட் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்