10 மின் மோட்டார்களின் ஒயர்கள் திருட்டு
ஒரத்தநாடு அருகே ஒரே நாள் இரவில் 10ஆழ்குழாய் கிணறுகளின் மின்மோட்டார் ஒயர்களை திருடி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே ஒரே நாள் இரவில் 10ஆழ்குழாய் கிணறுகளின் மின்மோட்டார் ஒயர்களை திருடி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்
மின் ஒயர்கள் திருட்டு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பொன்னாப்பூர் கொடமாங்கொல்லை பகுதியில்ஆழ்குழாய் கிணறுடன் கூடிய விவசாய மின்மோட்டார்கள் உள்ளது. இதிலிருந்து தண்ணீர் எடுத்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி இரவு ஒரு மர்ம கும்பல் இந்தப் பகுதியில் இருந்த 10 மின் மோட்டார்களின் ஒயர்களை வெட்டி திருடி சென்று விட்டனர். இதனால் தண்ணீர் இன்றி சாகுபடி பணியை தொடர முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
இதுகுறித்து விவசாயி பாலவிநாயகம் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே நாள் இரவில் மின் மோட்டார்களின் ஒயர்களை திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.விவசாய மின் மோட்டார்களின் ஒயர்கள் நள்ளிரவில் திருடி செல்லும் மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.