மின்வாரிய ஊழியர் வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு
தேவராயன்பேட்டையில் மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு போனது.
மெலட்டூர்
சம்பவத்தன்று ஊர் திரும்பிய சீமோன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பாபநாசம் போலீசில் சீமோன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சப்- இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் தடயவியல் நிபுணர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தடயங்களை அழிக்க மிளகாய்பொடியை தூவிச் சென்றது தரிய வந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடிக்கடி திருட்டு சம்பவம்
இதேபோல, தேவராயன்பேட்டை பகுதியில் கடந்த 4 மாதத்தில் மட்டும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பொன்மான் மேய்ந்த நல்லூர் கிராமத்தில் 2 இடங்களில் விவசாய பம்பு செட்டின் பூட்டை உடைத்து மின் மோட்டார்கள் திருட்டுபோயின.
மேலும், வீடுகளின் முன் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போயின. தற்போது மற்றொரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால், தேவராயன்பேட்டை கிராமமக்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆகவே, இப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.