மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-04 18:43 GMT

மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்யக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட செயலாளர் நெடுமாறன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், துணை தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்