ஒரே நாளில் 4 இடங்களில் மின் ஒயர்கள் திருட்டு
சுல்தான்பேட்டை அருகே ஒரே நாளில் 4 இடங்களில் மின் ஒயர்கள் திருட்டு போனது. இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே ஒரே நாளில் 4 இடங்களில் மின் ஒயர்கள் திருட்டு போனது. இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மின் ஒயர்கள் திருட்டு
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு கிணற்று பாசனம் மற்றும் ஆற்று நீர் பாசனம் உள்ளது. கிணற்று பாசனத்தில் மோட்டார் பொருத்தி நீர் இறைத்து தோட்டங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கந்தசாமி, சிவக்குமார், வங்கபாளையத்தை சேர்ந்த பொன்ராஜ், சண்முகசுந்தரம் ஆகிய 4 விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறுகளில் பொருத்தப்பட்டு இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மின் ஒயர்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர்.
வலைவீச்சு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் 4 இடங்களில் நடந்த திருட்டு சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.