நரிக்குடி அருகே மின் ஒயர் திருட்டு

நரிக்குடி அருகே மின் ஒயர் திருட்டு போனது.

Update: 2023-09-06 21:33 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ரெட்டகுளம் கிராமத்தில் உள்ள மயானத்தில் போர்வெல் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் மோட்டார் போட்டு தண்ணீர் எடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரெட்டகுளம் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மோட்டார் போட செல்லும்போது மின் கம்பத்தில் இருந்து மோட்டாருக்கு செல்லும் ஒயரை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்