கார் மோதி மின் கம்பம் சேதம்

கூடலூரில் கார் மோதி மின் கம்பம் பலத்த சேதமடைந்தது.

Update: 2022-11-09 18:45 GMT

கூடலூர், 

கூடலூரில் கார் மோதி மின் கம்பம் பலத்த சேதமடைந்தது.

கார் மோதியது

கர்நாடகா, கேரளா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து மிகுந்த நகரமாக கூடலூர் உள்ளது. ஆனால், அதற்கு ஏற்ப போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட வில்லை.இந்தநிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் தொரப்பள்ளியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின் கம்பம் சேதமடைந்தது. மேலும் அப்பகுதியில் நின்று இருந்த லாரியின் பின்பாகமும் சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரியத்தினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்களால் கூடலூர் பகுதியில் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை தடுக்க போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொண்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்