மதவாத சக்திகளுக்கு முடிவுகட்டும் விதமாக தேர்தல் வெற்றி இருக்க வேண்டும்;ஈரோட்டில் ஆ.ராசா எம்.பி. பேச்சு

மதவாத சக்திகளுக்கு முடிவுகட்டும் விதமாக இந்த தேர்தல் வெற்றி இருக்க வேண்டும் என்று ஈரோட்டில் ஆ.ராசா எம்.பி. கூறினார்.

Update: 2023-02-18 21:55 GMT

மதவாத சக்திகளுக்கு முடிவுகட்டும் விதமாக இந்த தேர்தல் வெற்றி இருக்க வேண்டும் என்று ஈரோட்டில் ஆ.ராசா எம்.பி. கூறினார்.

மண்டியிட மாட்டோம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் நேற்று கிருஷ்ணம்பாளையம் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஆ.ராசா எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

கடந்த 3 நாட்களாக இங்கு பிரசாரம் செய்து வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவரை பார்த்து நாங்கள் பயப்படுவதாக கூறி வருகிறார். உங்களை பார்த்து பயப்பட நாங்கள் என்ன குழந்தைகளா? நாங்கள் மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதியின் வளர்ப்பு. ஒருபோதும், யாரிடமும் மண்டியிட மாட்டோம்.

மதவாத சக்தி...

மதவாத சக்திகளுக்கு முடிவு கட்டும் விதமாக உங்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க இந்த இடைத்தேர்தலில் கை சின்னத்துக்கு வாக்களித்து வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசார கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நெசவாளர் அணி மாநில செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், மாநகராட்சி மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி, பகுதி செயலாளர் வி.சி.நடராஜன், வட்ட செயலாளர் மோகனசுந்தரம் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்