வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த ஆய்வு கூட்டம் நடந்தது

Update: 2022-12-15 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக நடைபெறும் பணிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசு சிறப்பு செயலாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர்கள் யுரேகா (மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, தாசில்தார் ஜெனிட்டா மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்