தர்மபுரி:
தர்மபுரி வக்கீல்கள் சங்க தேர்தல் நேற்று முன்தினம் தடங்கத்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு சந்திரசேகர், மணிவண்ணன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கோவிந்தராஜ், முனிராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர். தேர்தல் அலுவலராக கோபாலகிருஷ்ணன் பணியாற்றினார்.
இதில் வக்கீல்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர். வாக்கு எண்ணிக்கை முடிவில் சந்திரசேகர் சங்கத்தின் புதிய தலைவராகவும், கோவிந்தராஜ் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் சங்கத்தின் பிற நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.