ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகளில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-11-27 18:45 GMT

ஈரோடு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகளில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.

சிறப்பு சுருக்க திருத்தம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ஐ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்பேரில் ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 951 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அனைத்து வேலை நாட்களிலும் கடந்த 8-ந்தேதி முதல் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகிறது.

2,222 வாக்குச்சாவடி

இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் தகுதியான வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளும் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதில் வாக்காளர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் தேவையான மாற்றங்களை செய்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்