பாரதி மெட்ரிக் பள்ளிகளில் கட்டண சலுகையில் படிக்க தேர்வு

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் பள்ளிகளில் கட்டண சலுகையில் படிக்க தேர்வு நடந்தது.

Update: 2023-04-30 18:45 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் 100 சதவீதம் கட்டண சலுகையில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிப்பதற்கான தேர்வு நடைபெற்றது. இது பற்றி பாரதி கல்வி நிறுவனங்களின் செயலாளர் லட்சுமி கந்தசாமி கூறியதாவது:- கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தச்சூர் ஸ்ரீபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பங்காரம் பாரதி பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னசேலம், வடக்கனந்தல் ஆகிய ஊர்களில் இயங்கும் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், ஆக்ஸாலிஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் 100 சதவீதம், 75, 50 மற்றும் 25 சதவீதம் கட்டண சலுகையில் படிப்பதற்கான தேர்வு தச்சூர் ஸ்ரீபாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம் தலா 10 மதிப்பெண்கள், கணிதம் 30 மதிப்பெண்கள், அறிவியல் 40 மதிப்பெண்கள், சமூக அறிவியல் 10 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 10-ம்வகுப்பு பாடத்தில் இருந்து தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்த தேர்வில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். மதிப்பெண்கள் அடிப்படையில் கட்டண சலுகை குறித்து விபரங்கள் பெற்றோர்களின் செல்போனுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றார். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்