பஸ் மோதி மூதாட்டி பலி

பஸ் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2023-01-20 19:17 GMT

தா.பேட்டை அருகே பிள்ளாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியான்டி. இவரது மனைவி குமாரத்தி (வயது 67). சம்பவத்தன்று இவர் முத்தம்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் ஊருக்கு செல்வதற்காக முத்தம்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்தார். அப்போது முசிறியில் இருந்து தா.பேட்டை நோக்கி சென்ற தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குமாரத்தியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி விநாயகம் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் குமரன் (26) என்பவரை கைது செய்தார். இதேபோல் முசிறியை அடுத்த சிவந்தலிங்கபுரத்தை சேர்ந்த சங்கிலி (57) என்பவர் மோட்டார் சைக்கிளில் பெரம்பூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அய்யனார் கோவில் அருகே திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்