எலி மருந்தை தின்று மூதாட்டி தற்கொலை

நாகர்கோவிலில் கவனிக்க ஆளில்லாத வேதனையில் எலி மருந்தை தின்று மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-28 22:03 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கவனிக்க ஆளில்லாத வேதனையில் எலி மருந்தை தின்று மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

மூதாட்டி

நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் சேவியர். இவருடைய மனைவி லீலாபாய் (வயது 67). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 6 வருடத்திற்கு முன்பு ஜான் சேவியர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் லீலாபாய் மட்டும் இங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் வீட்டு சிகிச்சையில் இருந்தார்.

எலிமருந்தை தின்று சாவு

மேலும் அவரை பராமரிக்க ஆள் இல்லாத ஏக்கத்தில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கி கிடந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவனிக்க ஆளில்லாத ஏக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்