விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
போளூர் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
போளூர்
போளூர் அருகே நைனாவரம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை, விவசாயி. இவரது தாயார் வள்ளியம்மாள் (வயது 70) கடந்த 3 மாதமாக கால் வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 13-ந்தேதி கால்வலி அதிகமாக ஏற்படவே, மனமுடைந்த அவர் காட்டுப்பகுதிக்கு சென்று, அங்கு விஷச்செடிகளை பறித்து வந்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் அதை அரைத்து குடித்து விட்டார்.
இதையறிந்த சின்னதுரை அவரை போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.